குழந்தையின் புன்னகை
கற்று சிறந்தோறும், கல்லா சிறியோரும்
பண்பில் பழுதோறும் பண்பற்ற மூடரும்
கள்ளமில் குழந்தாய்
நுண் குறுமுகம் நிறைந்து
மென்மையினும் மென்மை அதரம் விரித்து
ஒற்றைப் பல்லுடைப் பொக்கை வாயில்
ஒட்டியிருக்கும் மழலை புன்னகை காணின்
நா தீண்டிய சர்க்கரை பாகாய் உள்ளம் நெகிழ்வாரே
இறைவா வேண்டுமே கண்டிப்பாய் இன்னும் ஒரு பிறவி
உன்னினும் இனிய குளவி பருவம் வேண்டி
கற்று சிறந்தோறும், கல்லா சிறியோரும்
பண்பில் பழுதோறும் பண்பற்ற மூடரும்
கள்ளமில் குழந்தாய்
நுண் குறுமுகம் நிறைந்து
மென்மையினும் மென்மை அதரம் விரித்து
ஒற்றைப் பல்லுடைப் பொக்கை வாயில்
ஒட்டியிருக்கும் மழலை புன்னகை காணின்
நா தீண்டிய சர்க்கரை பாகாய் உள்ளம் நெகிழ்வாரே
இறைவா வேண்டுமே கண்டிப்பாய் இன்னும் ஒரு பிறவி
உன்னினும் இனிய குளவி பருவம் வேண்டி
No comments:
Post a Comment