Monday, September 3, 2012

alaigal - oru kavidai

கரைவரும் அலைகளே, கலங்கி நிற்பதேனோ ?
கரைவந்த எந்தன் கால்களை
கட்டி அணைத்த போதும், மெதுவாய்
கிச்சுகிச்சு மூட்டிய போதும்,
தெளியாது தவித்தேன்
கவலை உன்னுடைய தென்னென்று?
முகவரி மறந்து வந்தாயோ?
முகங்கள் தேடி நின்றாயோ?

உன் நீல உடல் உமிழும்
வெள்ளை வியர்வை நுரையில்
ஒளிந்துள்ள கொள்ளைக் காதல்
இன்னதெனப் புரியவில்லையே !

வானோர் தம் செவியில் உன்
ஈனச்சுரம் விழவில்லையோ !
இறைவா,
உன்னவள் மடியில்புழுவென இழையும்
அலைகளின் குறைகள் நீ அறிகிலையோ !
ஒருக்கால்,
விழ விழ, தளராது எழும்
அலைகளின் பண்பை, உலகம் உணர
இறையும் செவிடன் ஆனானோ?

1 comment:

Devi said...

very nice Hari.. beautiful